பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

by Staff / 29-11-2022 04:44:22pm
 பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள எட்டயபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சோழபுரத்தினைச் சேர்ந்த மாணவி ஒருவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இன்று அவருடைய தாய் பார்த்து விட்டதாக சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்த பின்னர் திடீரென மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். காயமடைந்த மாணவி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo