பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க இணைய வழி புகார் மனு
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக முதலமைச்சர் குறித்து அவரது தாயார் குறித்து அவதூறாக பேசியது குறித்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சென்னை அண்ணா நகரில் நடந்த நிகழ்ச்சியின்போது சட்டசபைக்கு போய் அப்பாவை எங்கே? என்று கேட்கிறார்கள். வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே?. அப்பா யார் என்று சொல்வார்கள். சட்டசபையில் அப்பாவை தேடினால்.?.. எப்படி., இப்படிப்பட்டவர்கள் ஆட்சி தான் இங்கு அமைந்துள்ளது என்று அவர் பேசியது, அரசியல் களத்தில் வெப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு த.வெ.க. சார்பாக அமைச்சர்கள் பலர் கருத்து தெரிவித்த நிலையில், சென்னை காவல்துறை தலைவருக்கு வழக்குரைஞர் இணைய வழி பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அனுப்பி உள்ளார்.:
ஒரே நாடு 2.0 டிஜிட்டல் பத்திரிக்கை வெளியீட்டு விழாவின் போது அவர் இந்த கருத்தை முன் வைத்திருந்தார் . எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அவர் இது குறித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். ஒரே நாடு 2.0 பத்திரிகை வெளியிட்டு விழாவின் போது நான் மேடையில் பேசிய பேச்சை பிரித்து சித்தரித்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தாய் மீதும் தாய் நாட்டின் மீதும் தாய் மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான் என்று அதற்கு விளக்கம் தெரிவித்துள்ளார்.
Tags :



















