கன்டெய்னர் மீது லாரி மோதல்: இருவர் பலி

by Staff / 20-08-2023 01:33:15pm
கன்டெய்னர் மீது லாரி மோதல்: இருவர் பலி

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இரும்பு பொருட்களை ஏற்றிய லாரி, நேற்று முன்தினம், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக, சென்னை நோக்கிச் சென்றது. நேற்று அதிகாலை, 2: 00 மணிக்கு, சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரத்தில் மேம்பாலத்தை கடக்கும்போது, அங்கு ஏற்கனவே பழுதாகி நிறுத்தப்பட்ட கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், லோடு ஏற்றிய லாரியின் முன்பகுதி முழுதும் நசுங்கி, ஓட்டுனர் சோழம்யாதவ், 22, உதவியாளர்கள் இம்ரான்கான், 22, கார்த்திக் யாதவ், 24, ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று, இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய கார்த்திக்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மற்ற இருவரும் இறந்தனர். இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின், அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டன.

 

Tags :

Share via

More stories

Logo