பேருந்து கட்டணம் உயர்வு?.. அமைச்சர் விளக்கம்

by Editor / 24-10-2021 08:16:43pm
பேருந்து கட்டணம் உயர்வு?.. அமைச்சர்  விளக்கம்

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், டீசல் விலை 500 ரூபாயாக உயர்ந்துள்ளதால் போக்குவரத்து துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகளில் தினம் தோறும் 1.15 கோடி பேர் பயணம் செய்கின்றனர். டீசலுக்கான மானியத்தை அரசு வழங்கினாலும் கூட தொடர்ந்து டீசல் விலை அதிகரித்து கொண்டே வருவதால் போக்குவரத்துத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியவில்லை.இருந்தாலும் தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை.

தினந்தோறும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இலவச பயண திட்டத்தின் கீழ் சராசரியாக சென்னையில் பயணம் செய்கின்றனர். அதுவும் வேலை நாட்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via