நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

by Editor / 05-09-2024 09:56:02am
நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

நமது நாட்டின் சிறந்த அறிஞராகவும், ஆசிரியராகவும் இருந்த இந்தியாவின் 2-வது குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தங்கள் வாழ்க்கையும், எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இந்த தினத்தை மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள். நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள். அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்!" என பதிவிட்டுள்ளார்.
 

 

Tags : நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Share via

More stories

Logo