முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பா. ஜ. க தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார் .
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாரதிய ஜனதா கட்சியின்தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார் . அவருக்கு உத்தரப் பிரதேச மாநிலக்கட்சிப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் புதிய 8 தேசிய பொதுச் செயலாளர்களில் ஒரே பெண் நிர்வாகி இவராவார். 2024 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதி தோல்விக்குப் பிறகு, மத்திய அமைச்சரவை மற்றும் கட்சியின் முதன்மைப் பொறுப்புகளில் இருந்து விலகியிருந்த ஸ்மிருதி இரானிக்கு இந்த பதவி அரசியல் மறுபிரவேசமாகக் கருதப்படுகிறது .உத்தரப் பிரதேசத்தில் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும், அங்கு இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கவும் பாஜக தலைமை இவரை களமிறக்கியுள்ளது. நிதின் நபீனின்தலைமையிலுள்ள ஸ்மிருதி இரானியுடன் பல்வேறு மூத்த தலைவர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வசுந்தரா ராஜே சிந்தியா & ராம் மாதவ் ஆகியோா் கட்சியின் தேசிய துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் .பியூஷ் கோயல் தேசியப் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார் .புதிய பொறுப்பு குறித்து ஸ்மிருதி இரானி எக்ஸ் தளத்தில், பிரதமர் நரேந்திர மோதி மற்றும் தேசியத் தலைவர் நிதின் நபீன் ஆகியோருக்கு தனது நன்றியினைத் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
Tags :



















