வனத்துறை அமைச்சர் கருணாநிதி என்று குறிப்பிட்டு பேசியதற்கு திமுக எதிர்ப்பு. முதலமைச்சர்விஜய், அவருக்காக நான் சாரி கேட்டுக்கொள்கிறேன்.
இன்று சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் பொழுது வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசும்போது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திட்டங்கள் குறித்து அவர் தெரிவிக்கையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பெயரை கருணாநிதி என்று குறிப்பிட்டு பேசியதற்கு திமுக சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் கே. கே .எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து முதலமைச்சர் விஜய் ,அவர் பேசியது தவறுதான். அவருக்காக நான் சாரி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி பின்னர் தன் உரையை தொடர்ந்தார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கருணாநிதி என்று முன்னாள் முதலமைச்சர் பெயரை சூட்டி காட்டி பேசிய பொழுது, அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் உடனடியாக அவையில் மற்ற தலைவர்களை மரியாதை உடன் நடத்த வேண்டும் இனிமேல் கலைஞர் என்றுதான் குறிப்பிட வேண்டும் எனக் கூறி அவ்வாறு பெயரை சொல்லி பேசிய உறுப்பினரை தம் கருத்தை வாபஸ் பெற செய்தவர் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் அப்படிப்பட்ட தலைவர்களின் வழிகாட்டுதலில் நடந்த சட்டமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களும் அனைத்து தலைவர்களையும் உரிய மரியாதையோடு பேச வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.
Tags :


















