கேரளாவில் சிறுமியை கர்ப்பிணி ஆக்கிய 14 வயது மாணவன்

by Staff / 21-04-2022 02:08:35pm
கேரளாவில் சிறுமியை கர்ப்பிணி ஆக்கிய 14 வயது மாணவன்

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் தினமும் வேலைக்கு சென்று விடுவார்கள். வீட்டில் சிறுமி மட்டும் இருப்பார். இவர்களின் வீடு அருகே இன்னொரு குடும்பத்தினர் குடியிருந்து வந்தனர்.
 
அவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளார். பள்ளியில் படித்து வரும் அந்த மாணவன் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் பெற்றோரிடம் சிறுமி தனக்கு வயிற்று வலி இருப்பதாக கூறினார். இதையடுத்து பெற்றோர் அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தனர்.

சிறுமிக்கு 16 வயதே ஆவதால் இதுபற்றி ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

இதில் சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற 14 வயது சிறுவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக சிறுவன் மிரட்டியதால் இதனை வெளியில் சொல்லவில்லை என சிறுமி தெரிவித்தார். 

இதையடுத்து சிறுமியின் தந்தை கண்ணூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சிறுவன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

 

Tags :

Share via

More stories