ஐஐடி விவகாரம்: போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவி ஒருவருக்கு, அங்கு கேன்டீனில் பணிபுரிந்து வந்த ரோஷன் குமார் (22) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் இன்று (ஜூன் 28) கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'ஐஐடி வளாகத்தில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை' என கோஷமிட்டனர். இதையடுத்து, அங்கு விரைந்த காவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்தனர்.
Tags :