தலித் சிறுமி பலாத்காரம் செய்து கொலை
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குளத்தில் 14 வயது தலித் சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சஞ்சய் ராய் என்ற நபரும் அவரது கூட்டாளிகள் ஆறு பேரும் சேர்ந்து கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து சிறுமியைக் கடத்திச் சென்றதாக தெரிகிறது. பின்னர் அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.
Tags :