“கலைஞரின் கனவை நனவாக்க ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” ராகுல் காந்தி

கலைஞரின் நாணயம் வெளியிடுவது குறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது, “கலைஞரின் தொலைநோக்குப் பார்வை கோடிக்கணக்கான மக்கள் கண்ணியமாக வாழ வழி வகுத்தது. அவரது ஆட்சியின் கீழ் தமிழ்நாடு ஒரு தைரியமான பாதையில் பயணித்தது. அவரது கொள்கையில் இருந்த தெளிவு தமிழ்நாடு, முன்னோடியாக திகழ உதவியது. அவருக்கு நினைவு நாணயம் வெளியிடுவதில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார். மேலும், “கலைஞரின் கனவை நனவாக்க நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” என்றார்.
Tags :