“ஓய்வு பெற்ற அதிகாரியை நியமிப்பதா?” - அன்புமணி கண்டனம்

சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக ஓய்வு பெற்ற அதிகாரியை நியமிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அதில், “ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குநர் சுனில்குமார் நியமனம் கண்டிக்கத்தக்கது. பணியில் இருப்பவரை ஆணையத் தலைவராக நியமித்தால்தான் தவறு நேர்ந்தால் நடவடிக்கை எடுக்க முடியும்; நன்றிக் கடனுக்காக ஆணையத் தலைவர் பதவி வழங்க அரசு பதவிகள் முதல்வரின் குடும்பச் சொத்து அல்ல - பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
Tags :