என்எல்சி பிரச்சினை மத்திய அரசு பதிலளிக்க ஆணை
என். எல். சி. -யில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் நடத்திவரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கும், என். எல். சி. நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வழங்கக் கோரியும், தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதை தடுக்கக் கோரியும் என். எல். சி. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, என். எல். சி நிறுவனத்திற்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ராமசுப்ரமணியத்தை நியமிப்பது தொடர்பாக இரு தரப்பும் கலந்தாலோசித்து, முடிவெடுத்து தெரிவிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்தியஸ்தர் நியமிக்க தொழிலாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறிய நீதிபதி, மத்திய அரசும், என். எல். சி. யும் பதிலளிக்க ஆகஸ்ட் 22 வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
Tags :