இந்தியா சாதனை மான்கி பாத் உரையில் பிரதமர் பேச்சு

மான்கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, இந்தியா 400 பில்லியன் ஏற்றுமதி இலக்கை அடைந்து புதிய சாதனை நிகழ்த்தியிருப்பதாக குறிப்பிட்டார்.
இது பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் வலிமையை உலகு அறிய செய்துள்ளதாகவும், உலக அளவில் இந்திய பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக இந்தியாவின் தோல் உற்பத்தி பொருட்கள், சுவை மிக்க பழங்கள், தமிழகத்தில் உற்பத்தியாகும் வாழைப்பழங்களுக்கு உலகளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் வருகிற ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்பட உள்ளதாக கூறிய அவர், நாட்டின் சுகாதார நிலையை முன்னேற்ற உதவி வருவோருக்கு நன்றி தெரிவித்தார்.
வளர்ந்து வரும் ஆயுஷ் துறை குறித்தும், இயற்கை மருந்துகள் குறித்தும் உலக அறிய பல மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் எனவும் வலைதள வாசிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உரைக்கு இடையே இந்தியாவில் தன்னலமற்ற வகையில் தூய்மை பணி மேற்கொள்வோரை நினைவூட்டி பேசிய மோடி, சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனி இயக்கத்தை ஏற்படுத்தி சுமார் 150 ஏரி- குளங்களை தூர்வாரி இருப்பதாக தெரிவித்தார்.
இதேபோல் வெயில் காலம் நெருங்குவதால், விலங்குகள் பறவைகளுக்கென வீட்டின் வெளியே தண்ணீர் வைக்கவும் கேட்டுக்கொண்டார். மேலும் இது பற்றி குழந்தைக ளுக்கு கற்றுக்கொடுக்கவும் அறிவுறுத்தினார்.
முன்னதாக இதற்கென கேரளாவை சேர்ந்த முப்பாட்டம் ஸ்ரீ நாராயணன் மண்பாண்டம் செய்து சபர்மதி ஆசிரமத்திற்கு இலவசமாக வழங்குவதையும் குறிப்பிட்டு பேசினார்.
Tags :