மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

by Editor / 25-07-2025 12:44:50pm
மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டும் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. முதற்கட்ட கலந்தாய்வு வரும் 30ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via