அரசுப் பள்ளி மேற்கூரை இடிந்து 4 குழந்தைகள் பலி
ராஜஸ்தானின் ஜலவர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இன்று (ஜூலை.25) மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கோர விபத்தில் 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் சம்பவம் நடந்த போது பள்ளியில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். போலீஸ் விசாரிக்கிறது.
Tags :



















