கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை - துரை வைகோ

by Staff / 05-11-2023 05:37:59pm
கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை - துரை வைகோ

தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்று மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக, தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்று கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ.

 

Tags :

Share via