பாஜகவின் பகல் கனவு தகர்த்தெறியப்படும் - கே.எஸ்.அழகிரி

by Staff / 05-11-2023 05:25:37pm
பாஜகவின் பகல் கனவு தகர்த்தெறியப்படும் - கே.எஸ்.அழகிரி

பாஜகவின் பழிவாங்கும் போக்கு நிச்சயமாக முறியடிக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்தெடுப்பதில் மத்திய அரசு படுதோல்வி அடைந்துள்ளது. அதனால், ஆளுநர், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை அமைப்புகளோடு கூட்டணி சேர்ந்து ஆதாயம் தேடப்பார்க்கிறது. அவர்களின் பகல் கனவு தமிழக மக்களின் பேராதரவோடு தகர்த்தெறியப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via