மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் விலகல் 

by Editor / 06-05-2021 08:07:53pm
மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் விலகல் 

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ் ஆகிய இருவரும் திடீரென்று விலகியுள்ளனர். கட்சியை சீரமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது; தலைவர் கமல்ஹாசனுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கி அனைத்து நிர்வாகிகளும் பதவி விலகுகிறோம் என பொன்ராஜ் கூறியுள்ளார்.
நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்ய கூட்டணி தோல்வியடைந்ததால் இம்முடிவை நிர்வாகிகள் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களுடன் பொதுச்செயலாளர்கள் சந்தோஷ் பாபு. சி.கே.குமரவேல், மவுரியா, முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி உள்ளிட்டோரும் ராஜினாமா செய்துள்ளனர்.செய்தியாளர்களிடம் பேசிய மகேந்திரன், “கட்சியின் இத்தனை பெரிய தோல்விக்குப் பிறகும், தனது தோல்விக்குப் பின்னரும் தலைவர் தனது அணுகுமுறையில் இருந்து மாறுபட்டு செயல்படுவதாக எனக்கு தெரியவில்லை. கமல் இனி மாறிவிடுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. கமல் நல்ல தலைமை கொண்டவராக மீண்டும் செயல்பட வேண்டும். கட்சி தொண்டர்கள் கொடுத்த உற்சாகமும், உத்வேகமும்தான் எனக்கு வலிமையை கொடுத்தது. அரசியல் எனும் விதையை எனக்குள் விதைத்த தலைவர் கமல்ஹாசனுக்கு என் மனமார்ந்த நன்றி” எனக் கூறினார்.

 

Tags :

Share via