தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்கம் மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

by Admin / 13-02-2026 01:01:23am
 தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்கம் மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை கிண்டி ஐடிசி கேன் சோலா ஹோட்டலில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்கம் மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்து 36.968 கோடி மதிப்பிலான 71 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஏற்கனவே ,முடிவுற்ற 31,934 கோடி மதிப்பிலான 52 தொழில் நிறுவன திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இந்த திட்டங்களில் மூலம் சுமார் 1.48 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பாரத் பயோடெக் நிறுவனத்துடன் காஞ்சிபுரத்தில் உயிரையும் மருந்து உற்பத்தி அமைக்க 5000 கோடி மதிப்பிலான புரிந்துணர் ஒப்பந்தம் உள்பட இரண்டு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. கடந்த 2021 முதல் 2026 வரை கையெழுத்து ஆன 1179 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சுமார் 73.53 திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக முதலமைச்சர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.. திராவிட மாடல் என்பது வளர்ச்சிக்கான பாடல் என்று குறிப்பிட முதலமைச்சர் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளதையும் அவர் முன் வைத்தார்.

 

Tags :

Share via
Logo