காதலனுடன் சேர்ந்து தாயை தீர்த்துக்கட்டிய 10-ம் வகுப்பு மாணவி

by Editor / 24-06-2025 04:12:17pm
காதலனுடன் சேர்ந்து தாயை தீர்த்துக்கட்டிய 10-ம் வகுப்பு மாணவி

தெலங்கானா: ஹைதராபாத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை, காதலனுடன் சேர்ந்து 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜீடிமெட்லா பகுதியைச் சேர்ந்த அஞ்சலி என்பவரின் மகள் தேஜாஸ்ரீ (16), சிவா (19) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு அஞ்சலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், தேஜாஸ்ரீ தனது காதலன் சிவா மற்றும் அவரது சகோதரர் யஷ்வந்த் (18) ஆகியோருடன் சேர்ந்து, அஞ்சலியை கழுத்தை நெரித்து, தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.

 

Tags :

Share via