இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் -11 பேர் காயம்
இஸ்ரேல் நாட்டின் பெத்வாயின் கிராமத்தில் உள்ள சமூகநல கூடத்தின் மீது ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர். அவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க சென்றபோது மீண்டும் அதே பகுதி தாக்கப்பட்டதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. இந்த பயங்கர தாக்குதலுக்கு ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
Tags :



















