ரஜினிகாந்த் சென்னை திரும்புவதில் தாமதம்

by Editor / 08-07-2021 12:46:28pm
ரஜினிகாந்த் சென்னை திரும்புவதில் தாமதம்

நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவிற்கு சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள செல்வது வழக்கம். ஒவ்வொரு வருடமும் மே - ஜூன் மாதங்களில் இவர் சிகிச்சைக்காக செல்வது வழக்கம். இந்த வருடம் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார்.

சென்னை வந்த பின் புதிய படப்பிடிப்பு குறித்து ரஜினிகாந்த் ஆலோசிக்க உள்ளார். அதிரடி இயக்குனர் ஒருவருடன் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த் இன்று காலை சென்னை வருவதாக இருந்தது. நேற்று மாலை புறப்பட்டு இன்று காலை சென்னை வருவதாக இருந்தது.

ஆனால் பல்வேறு காரணங்களால் தமிழ்நாடு வர கூடிய இவரின் பயணம் தள்ளிப்போய் உள்ளது. ரஜினிகாந்த் சென்னை திரும்புவது ஒரு நாள் தாமதம் ஆகியுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை இவர் சென்னை வர உள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo