இ.டி பார்த்தும் பயமில்லை.. மோடி பார்த்தும் பயமில்லை

by Staff / 20-08-2023 12:02:52pm
இ.டி பார்த்தும் பயமில்லை.. மோடி பார்த்தும் பயமில்லை

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் கலைஞர் திருவுருவச்சிலை மற்றும் பேனா வடிவிலான சிலையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ''பாஜக என்ற கட்சியே தமிழ்நாட்டிற்கு தேவையற்றது. எல்லா கட்சிகளிலும் பல அணிகள் உள்ளது. அதேபோல, சி.பி.ஐ, இ.டி (அமலாக்கத்துறை), ஐ.டி போன்ற பல அணிகள் பாஜகவில் உள்ளது. நாங்கள் இடி பார்த்தும் பயப்பட மாட்டோம், மோடியை பார்த்தும் பயப்பட மாட்டோம். நீட்டுக்கு எதிராக அதிமுக எதையும் செய்யவில்லை'' என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo