திமுகவின் முன்னணி  தலைவர் முரசொலி மாறன்  

by Editor / 16-08-2021 05:12:57pm
திமுகவின் முன்னணி  தலைவர் முரசொலி மாறன்  

ஆகஸ்ட் 17 பிறந்தநாள் 

முரசொலி மாறன் (ஆகஸ்ட் 17, 1934-நவம்பர் 23) தி. மு. கவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். முரசொலி வார இதழின் ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர். மூன்று முறை நடுவண் அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். பன்னாட்டு வணிக விலை பேரங்களில் (GATT) இந்தியாவிற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பாராட்டுக்கள் பெற்றவர். இவர் ஒரு செய்தியாளராகவும் திரைப்பட எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்.
முரசொலி மாறன் திருவாரூர் மாவட்டம் (இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில்) உள்ள திருக்குவளையில் 17 ஆகத்து 1934 ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் - சண்முகசுந்தரி இணையாருக்கு முதல் மகனாக பிறந்தார். இவர் தந்தை சண்முகசுந்தரம் திருவாரூரில் குடி கொண்டு இருக்கும் இறைவன் சிவபெருமாளின் திருப்பெயரான தியாகராஜ பெருமாளின் மேல் உள்ள பக்தியால் தியாகராஜ என்ற பெயருடன் தனது பெயரில் உள்ள சுந்தரம் என்பதை சேர்த்து மகனுக்கு தியாகராஜசுந்தரம் என்று அவர் தந்தை பெயரிட்டார். இவர் தாயாரான சண்முகசுந்தரி திமுக தலைவரான மு. கருணாநிதியின் இரண்டாவது அக்கா ஆவார்.
இவர் தாய்மாமாவான கருணாநிதி அவர்கள் தனது ஆரம்பகால அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக கையெழுத்து பத்திரிக்கையை நடத்தி வந்த போது அவரிடம் உள்ள அனைத்து விதமான புத்தகங்களையும் குறிப்பாக அரசியல் சார்ந்த புத்தகங்களை மிகவும் கவனத்துடன் படித்து தனது மாமாவான கருணாநிதியிடமே பல சுவையான ஆலோசனை விவாதங்கள் செய்துள்ளார்.
அன்றைய அண்டை நாடுகளில் அரசியல் சம்பந்தபட்ட நூல்களை படித்து மாநில சுயாட்சி என்ற தனது அரசியல் அனுபவம் வாய்ந்த புத்தகத்தை படைத்துள்ளார். பின்பு கலைஞர் கருணாநிதி அவர்கள் முரசொலி என்ற தனது சொந்த பத்திரிக்கை நடத்தி வந்த போது அதில் மேலாளாராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றி வந்த போது தனது பெயரை மாறன் என்று புனைபெயராக மாற்றி வைத்து கொண்டார்.
மேலும் அதே காலத்தில் திரைப்படங்களிலும் கதை-வசனகர்த்தாவாக பணியாற்றும் போது தனது பெயரை மாறன் என்று பதிவு செய்ய ஏற்கனவே திரையுலகில் மாறன் என்ற பெயரில் இரண்டு பேர் கதை-வசனகர்த்தாவாக இருந்ததால்.
இவர் தான் கதை-வசனம் எழுதிய முதல் திரைப்படமான குலதெய்வம் படத்தின் தயாரிப்பாளர் ஏ. வி. மெய்யப்பச் செட்டியார். அவர்கள் இவருக்கு மாறன் என்ற பெயருடன் சேர்த்து அவர் மாமா கருணாநிதி நடத்தி வந்த பத்திரிக்கையின் பெயரான முரசொலி என்பதை அடையாளமாக சேர்த்து முரசொலி மாறன் என்று பெயர் வைத்தார்.
மேலும் தனது மாமா கருணாநிதி அவர்களை போல் திரைப்படத்துறையிலும் கதை-வசனம்-இயக்கம் என்று திரைப்படம் சம்பந்தபட்ட பல தொழில் பரிமானங்களிலும் நுட்பமாக பணியாற்றி திரையுலகிலும் சாதனை படைத்தார். இவரின் இரண்டு மகன்களில் ஒருவர், தயாநிதி மாறன், ஜவுளித் துறையின் நடுவண் அமைச்சராக இருந்தவர். தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர். மூத்தவர் கலாநிதி மாறன் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

 

Tags :

Share via