முதல்வன் OPS’ முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

by Editor / 27-10-2023 09:47:33pm
முதல்வன் OPS’ முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரிலான முதல்வன் OPS’ முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ராஜகோபால் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர், “முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரிலான 'முதல்வன் OPS' என்கின்ற முகநூல் பக்கம் சமூக விரோதிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஹேக் செய்தவர்கள் தொடர்ந்து அந்த முகநூல் பக்கத்தில் தவறுதலான செய்திகள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். முகநூல் பக்கத்தை மீட்க எங்களது தொழில்நுட்ப குழுவினர் முயன்று வருகிறார்கள்” என ஓபிஎஸ் ஆதரவாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

 

Tags : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

Share via

More stories

Logo