கண்மாயில் மூழ்கி பள்ளி சிறுவன் பலி.
மதுரை மாடக்குளம் கண்மாயில் மூழ்கி 13 வயது சிறுவன் இன்று பலி. தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். மதுரை மாடக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்தியா. இவர்களின் மகன் வர்ஷன் ( 13). மங்கையர்க்கரசி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் மகள் அபிநயா (8) மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று தேர்வு முடிந்து இன்று விடுமுறை என்பதால் வி கே பி நகரில் உள்ள நண்பர்கள் கார்த்திக், கருப்பு , வெற்றிவேல், ஆகியோருடன் வர்சனும் சேர்ந்து மாடக்குளம் கண்மாய் போடி ரயில்வே லைன் பகுதியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது வர்ஷனுக்கு நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதியில் சென்றுள்ளார் இதனால் கண்மாயில் உள்ள சகதியில் சிக்கியுள்ளார். நீண்ட நேரம் வர்ஷன் வராததால் நண்பர்கள் வர்ஷனின் வீட்டிற்கு தகவல் தெரிவிக்க தந்தை மற்றும் உறவினர்கள் கண்மாயில் தேடினர். இது குறித்து தகவல் தீயணைப்பு துறை தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்து வர்ஷினின் உடலை மீட்டனர். பள்ளி விடுமுறை நாள் என்பதால் கண்மாயில் குளிக்க சென்ற மாணவர்கள் நீச்சல் தெரியாததால் உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த எஸ் எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும் இறந்த சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Tags :



















