கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது

by Staff / 23-12-2023 04:09:19pm
கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது

பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு, கிருஷ்ணசாமிபுரம் பகுதியில் நேற்று கிணத்துக்கடவு போலீசார் ரோந்து சென்றபோது அந்தப் பகுதியில் ஒரு வாலிபர் சந்தேகத்துக்கிடமாக நின்றார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபர் வைத்திருந்த பையில் இருந்த பொட்டலத்தை சோதனையிட்ட போது அதில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை கிணத்துக்கடவு போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் ஒடிசா மாநிலம் ஷான்பூரை சேர்ந்த மகேந்திரநாக் வயது (24)என்பதும் இவர் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கிணத்துக்கடவு பகுதியில் உள்ள வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய வந்தது தெரிய வந்தது.இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, மகேந்திரநாக்ஐ கைது செய்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via

More stories