ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரூ.25 கோடி பேரம்: கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். ஆம் ஆத்மியின் 7 எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயன்றதாகவும், கட்சி மாறியவர்களுக்கு 25 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பாஜக எம்எல்ஏக்கள் இன்னும் எங்கள் எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றார். மேலும், மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்போவதாக பாஜக மிரட்டுவதாகவும் அவர் கூறினார்.
Tags :