தேசிய அரசியலில் குதித்த மன்சூர் அலிகான்

by Staff / 27-01-2024 01:23:24pm
தேசிய அரசியலில் குதித்த மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான் தனது கட்சியின் பெயரை மாற்றி தேசிய அரசியலில் குதித்துள்ளார். 'தமிழ் தேசிய புலிகள்' என்ற கட்சியின் பெயரை 'இந்திய ஜனநாயக புலிகள்' என மாற்றியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எளியவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதும், பெரியாரின் சிந்தனைகளை இந்தியா முழுவதும் பரப்புவதும் தான் எங்கள் கட்சியின் நோக்கம். இதற்காக இந்தியா முழுவதும் பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளோம் . மேலும் வரும் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories