காரில் இருந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட கேரள ஆளுநரால் பரபரப்பு

சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகானால் பரபரப்பு ஏற்பட்டது. கொல்லம் நிலமேலில் ஆளுநருக்கு எதிராக எஸ்எஃப்ஐ தொண்டர்கள் கருப்பு கொடி காட்டியதை தொடர்ந்து, காரில் இருந்து இறங்கிய ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் சாலையில் இறங்கி நின்றார். மறுபடியும் காரில் ஏறாமல் அங்கேயே நின்றதால் பாதுகாப்பு வழங்கும் போலீசார் அவசரமாக அவசரமாக அங்கிருந்து அனுப்ப முயற்சித்தனர். போராட்டம் நடத்தி கருப்பு கொடி காட்டிய எஸ்எஃப்ஐ தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே இங்கிருந்து செல்வேன் என ஆளுநர் திட்டவட்டமாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆளும் இதுசாரி அரசுடன் ஆளுநர் தொடர்ந்து மோதல் போக்குடன் செயல்பட்டு வருவதாக அவர் செல்லுமிடமெல்லாம் கருப்பு கொடி காட்டி வருகின்றனர்.
Tags :