அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.

by Editor / 24-02-2022 11:10:38pm
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.

சென்னை, ராயபுரத்தில் தேர்தல் விதிகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட  அதிமுகவினர் 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டு  நள்ளிரவில் ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதன்பின்னர், மார்ச் 7 ஆம் தேதி வரை  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பின் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை நாளை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான 2வது வழக்கில் ஜாமின் வழங்கி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜாமின் கிடைக்காததால் அவர் புழல் சிறையில் தொடர்ந்து இருக்கும் நிலை உள்ளது.

 

Tags : ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.

Share via

More stories