கலைஞர் நூற்றாண்டு விழா தேதி மாற்றம்

by Staff / 08-12-2023 04:30:11pm
கலைஞர் நூற்றாண்டு விழா தேதி மாற்றம்

தமிழ் திரையுலகம் சார்பில் கொண்டாடப்பட இருந்த, கலைஞர் நூற்றாண்டு விழா, வரும் ஜனவரி 6 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகம் சார்பில் டிச.24 ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற இருந்தது. இந்த விழாவுக்கு, ரஜினி. கமல், அஜித், விஜய் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்நாளில் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில், தற்போது நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், திமுகவினர் அதில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விழா தேதியை மாற்றியுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது

 

Tags :

Share via

More stories

Logo