சிறுவன் ஓட்டிய டிராக்டர் மோதி முதியவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுவன் ஓட்டிச் சென்ற டிராக்டர் மோதிய விபத்தில், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஓசூர் அருகே அஞ்செட்டியில் 12ஆம் வகுப்பு மாணவன் டிராக்டர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக முதியவர் காளியப்பன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இந்த கோர விபத்தில் முதியவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :