தேனி அருகே அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

by Reporter / 20-07-2021 05:53:57pm
 தேனி அருகே அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 

தேனி மாவட்டம், கோம்பை பேருராட்சிக்கு உட்பட்ட பி.ரெங்கநாதபுரத்தில்  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர், மருத்துவ மனையின் அலுவலக உதவியாளர் மற்றும் மருந்தாளர் ஆகியோர் பொதுமக்களுக்கு எதிராக நடப்பதாக குற்றச்சாட்டு வந்ததையொட்டி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் அமைப்பினர் சம்பந்தபட்ட இம்மூவரையும் பணி இடமாறுதலின்றி நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டியும் மாவட்ட மருத்துவ நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் நாகம்மாள், மாவட்ட அமைப்புச் செயலாளர் இளையராஜா மற்றும் மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர்களான அபுதாஹிர்,சுப்பிரமணி,ஜோதிபாண்டி கண்ணன்,ஈஸ்வரன், மாணிக்கம்,ஷேக் ஹஜ் முகமது உதுமான் அலி, முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

 

Tags :

Share via

More stories