இரண்டு வருடங்களில் கோடி வேலை வாய்ப்பு

by Staff / 01-12-2022 12:34:24pm
இரண்டு வருடங்களில் கோடி வேலை வாய்ப்பு

டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஒரு அங்கமான எலக்ட்ரானிக்ஸ், ஸ்டார்ட் அப்கள் மற்றும் ஐடி சார்ந்த சேவைகள் ஆகிய துறைகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இலக்கு என்று தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வனி வைஷ்ணவ் தெரிவித்தார்.டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூன்று முக்கிய தூண்கள் என எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, ஐடி-ஐடிஇஎஸ் மற்றும் ஸ்டார்ட் அப்களை விவரித்த அவர், இந்தத் துறைகள் ஏற்கனவே 88-90 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளன என்றார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது ஒரு கோடியை எளிதில் தாண்டும். ஸ்டார்ட் அப்களை அமைப்பதற்கான பிளக் அன்ட் ப்ளே வசதிகளை சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க் ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) வழங்கி வருவதாக அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்தார்.

 

Tags :

Share via