மறைந்தும் உலக சாதனை படைத்த விஜயகாந்த்

by Staff / 03-05-2024 01:09:13pm
மறைந்தும் உலக சாதனை படைத்த விஜயகாந்த்

சென்னை தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர். அப்படி, அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவிடமாக விஜயகாந்தின் நினைவிடம் போற்றப்படுகிறது. அதன் காரணமாக லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via