பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸுக்கு வக்கீல் நோட்டீஸ்

by Staff / 24-06-2024 04:30:21pm
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸுக்கு வக்கீல் நோட்டீஸ்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் தங்களை தொடர்புபடுத்தி பேசியதாக, பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடம் தலா ரூ. 1 கோடி மான நஷ்டஈடு கேட்டு திமுக எம்.எல்.ஏ.-க்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
பாமக தலைவர்கள் இருவரும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் மீது கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடரப்படும் என்றும் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.

 

Tags :

Share via