கருவேலி மரத்தில் பெண்ணின் சடலம்.. உறவினர்கள் கண்ணீர்

by Editor / 21-04-2025 05:22:43pm
கருவேலி மரத்தில் பெண்ணின் சடலம்.. உறவினர்கள் கண்ணீர்

பெண் செவிலியர் சந்தேகத்துக்கு இடமான வகையில் கருவேலி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவாறு சடலமாக மீட்கப்பட்டனர். கள்ளக்குறிச்சியில் உள்ள கீர்த்தி கிளீனிக்கில் செவிலியராக பணியாற்றி வரும் இளம்பெண் சூர்ய கலா கருவேலி மரத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இதனால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? உண்மையில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். பெண்ணின் மரணத்தை அறிந்த குடும்பத்தினர் கண்ணீரில் தவிக்கின்றனர்.

 

Tags :

Share via