செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: நவ-6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

by Staff / 30-10-2023 04:01:08pm
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: நவ-6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதற்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அனிருதா போஸ் மற்றும் பீலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு நவம்பர் 6ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

Tags :

Share via