தர்மம் எடுத்து பிழைத்தவரின் பணத்தை பிடுங்கி அவரை கொலைசெய்த நபர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தென்காசி யானைப்பாலம் ஆற்றுப்படுகை அருகே அடையாளம் தெரியாத ஆண் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் பிரேதத்தை கைப்பற்றி கொலை வழக்கு பதிவு செய்து துரிதமாக விசாரணை செய்து இறந்த நபர் மேலப்புலியூர் கிருஷ்ணக்கோனார் மகன் சங்கர் நாராயணன் என்பது தெரியவந்தது.இவர் கடந்த 15 ஆண்டுகாலமாக குடும்பத்தை பிரிந்ததிலிருந்து வீட்டுக்கு செல்லாமல் தர்மம் எடுத்து வாழ்க்கையை நடத்திவந்துள்ளார். தென்காசி காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவுப்படி துணை காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர் மேற்பார்வையில் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் மற்றும் உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார் , காவலர்கள் சரவணகுமார் ஆஷிக் அலி,சிவப்பிரகாஷ்,கார்த்திக், சதாம் ஆகியோர் அடங்கிய குழுவினர் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் இறந்த நபருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுடலை குமார் என்பவன் சங்கர் நாராயணன் தர்மம் எடுத்து வைத்திருக்கும் பணத்தை பிடுங்கி சென்றதில் முன்பகை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சந்தேகத்தின்படி அவனது கூட்டாளியான முகமது அலி என்ற கஞ்சா அலியை பிடித்து விசாரணை செய்ததில் முகமது அலி என்ற கஞ்சா அலி என்பவர் தனது நண்பர்கள் சுடலை குமார், ரசாக் ஆகியோர்களுடன் சேர்ந்து குடிப்பதற்க்கு பணம் தேவைபட்டதால் சங்கரநாராயணன் தர்மம் எடுத்து வைத்திருந்த பணத்தை கொள்ளை அடிப்பதர்க்கு சங்கரநாராயணன் மீது தலையில் கல்லால் தாக்கி கொலை செய்து பணம் 3,452/- பறித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டு முகமது அலி என்ற கஞ்சா அலியை கைது செய்தனர்.இவர் மீது தென்காசி காவல்நிலையத்தில் பல வழக்குகள் உள்ளது தலைமறைவாக உள்ள இரண்டு எதிரிகளை பிடிக்க தனிப்படை யினர் தீவிர தேடுதல் வேட்டையை நடத்திவருகின்றனர்.
Tags : தர்மம் எடுத்து பிழைத்தவரின் பணத்தை பிடுங்கி அவரை கொலைசெய்த நபர் கைது