உதவி ஆய்வாளர்,காவலரை  தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது.

by Editor / 27-10-2023 10:35:56pm
 உதவி ஆய்வாளர்,காவலரை  தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது.

தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறையின் ஆல்பா வாகனம் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது பேருந்து நிலையத்தில்  நின்றுகொண்டிருந்த திருநங்கைகளிடம் தகராறு செய்து கொண்டிருந்த நபர்களை சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் காவலர் அல்போன்ஸ் ராஜா ஆகியோர் விசாரித்துக் கொண்டிருக்கும் பொழுது  அவர்களை தாக்கி கொலை மிரட்டல்  விடுத்து தப்பி சென்ற நபர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து   வழக்கின்குற்றவாளிகளை தென்காசி போலீசார் தேடிவந்த நிலையில் அந்தநபர்கள் வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த நெற்கட்டும் செவல்  பகுதியை சேர்ந்த  முத்துக்குமார், .சுப்பையா என தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்கள் 2 நபர்களையும் தென்காசி போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதனைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  அறிவுறுத்தலின் பேரில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி  ஆய்வாளர் பாலமுருகன் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து  பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

 

Tags :  உதவி ஆய்வாளர்,காவலரை  தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது.

Share via

More stories