இன்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மயிலாப்பூர் பகுதியிலிருந்து தொடங்குகிறார்.

by Admin / 25-03-2026 01:41:47am
இன்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மயிலாப்பூர் பகுதியிலிருந்து தொடங்குகிறார்.

இன்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மயிலாப்பூர் பகுதியிலிருந்து தொடங்குகிறார். நாளை மறுநாள் ஆலந்தூர் மற்றும் தாம்பரத்திலும் 28ஆம் தேதி வட சென்னை ஆர். கே. நகர் மற்றும் திருவொற்றியூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து மார்ச் 29-ஆம் தேதி முதல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ,விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்டத்தின் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கு முன் அவர் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற முழக்கத்தோடு கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்திலிருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி இருந்தார். இப்பொழுது தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை அவர் சென்னையிலிருந்து ஆரம்பிக்கயுள்ளார்.

 

Tags :

Share via

More stories