by Staff /
06-07-2023
12:36:18pm
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் அருகே குடிசைப்பகுதியில் நச்சு வாயு கசிந்ததில் 3 குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சட்டவிரோத சுரங்கத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போல் கடந்த ஆண்டு டிசம்பரில், போக்ஸ்பர்க்கில் பெட்ரோலிய வாயு ஏற்றிச் சென்ற டிரக் பாலத்தின் அடியில் சிக்கி வெடித்ததில் 41 பேர் இறந்தனர்.
Tags :
Share via