by Staff /
06-07-2023
01:52:16pm
தங்கத்தை உள்ளாடைக்கு மறைத்து வைத்து கடத்தலில் ஈடுபட்ட நபரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று வழக்கமான தணிக்கைக்கிடையே சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், ஷார்ஜாவில் இருந்து வந்த பயணியை சோதனையிட்டனர். அவரது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 331 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கத்தின் விலை ரூ.20 லட்சம் இருக்கும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags :
Share via