கோவாவில் கனமழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை
<br /> இந்திய வானிலை ஆய்வு மையம் கோவாவுக்கு 'ரெட்' அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலோர மாநிலத்தின் இரு மாவட்டங்களின் சில பகுதிகளில் வியாழக்கிழமை கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வட கோவா மற்றும் தெற்கு கோவா மாவட்டங்களில் தலா ஒன்று என இரண்டு வெவ்வேறு ஹெல்ப்லைன்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழை பொழிவு பெரும்பாலும் வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவாவில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.Tags :