மகா தீபம் நிறைவடைந்தது இன்று மலை உச்சியில் மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் உலக பிரசித்தி பெற்ற திரு கார்த்திகை தீபத் திருவிழா மகா தீப கொப்பரை கடந்த 12ம் தேதி அதிகாலை திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 2668 அடி உயரம் கொண்ட தீப மலை உச்சிக்கு ஊழியர்களால் கொட்டும் மழையிலும் கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து 13ம் தேதி மாலை 6 மணிக்கு மகா தீப கொப்பரையில் 4500 கிலோ நெய் மற்றும் 1500 மீட்டர் காடா துணி பயன்படுத்தி மகா தீபம் ஏற்றப்பட்டு தொடர்ந்து 11 நாட்கள் ஜோதிப்பிழம்பாய் அண்ணாமலையார் மலை உச்சியிலிருந்து காட்சி கொடுத்தார்.
இன்று அதிகாலையுடன் மகா தீபம் நிறைவடைந்த நிலையில் இன்று மலை உச்சியில் மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலையில் இருந்து இறக்கி கொண்டு வரும் பணி தற்பொழுது தொடங்கியது.
பர்வத ராஜகுல மரபினர் 30க்கும் மேற்பட்டோர் 200 கிலோ எடை கொண்ட மகா தீப கொப்பரையை தோளில் சுமந்து கொப்பரையை இறக்கி கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags : மகா தீபம் நிறைவடைந்தது இன்று மலை உச்சியில் மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள்.