96 கிலோ குட்கா பறிமுதல்.. வாலிபர் கைது

கோவை வரதராஜபுரம் காமராஜர் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் சிலர் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று அங்கு குறிப்பிட்ட அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கிருந்து 96 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட கோவை வரதராஜபுரம் காமராஜர் ரோட்டை சேர்ந்த ரஷீத் (37) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான முலாராம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :