பயங்கர தீ விபத்து: ஒருவர் பலி
சிகாகோவில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சவுத் லேக் பார்க் அவென்யூவின் 4800-பிளாக்கில் உள்ள 25 மாடிகளைக் கொண்ட ஹார்பர் ஸ்கொயர் கூட்டுறவு கட்டிடத்தின் 15வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டு பல தளங்களுக்கு பரவியது. இந்த விபத்தில் 15வது மாடியில் வசித்த ஒருவர் உயிருடன் எரிந்து சாம்பலானார். பலர் பலத்த காயம் அடைந்தனர். 9 மாடிகளுக்கு தீ பரவியது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினர்.
Tags :