நடுரோட்டில் பாஜக தலைவர் சுட்டு கொலை
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாஜக தலைவர் அனுஜ் சவுத்ரி அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். வியாழக்கிழமை மாலை பாஜக தலைவர் அனுஜ் மற்றொரு நபருடன் சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 3 பேர் அவர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை அடுத்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த கொலை சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
Tags :